MARC காட்சி

Back
திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில்
245 : _ _ |a திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில் -
246 : _ _ |a திருநீர்மலை
520 : _ _ |a பூலோகத்தில் அவதாரம் முடிந்தபின் வைகுண்டத்திற்கு திரும்பும் காட்சி இங்கு ஸேவையாகிறது. அதாவது அமர்ந்த நிலையில் – நரசிம்மராக, நின்ற நிலையில் – நீர்வண்ணராக, சயன நிலையில் – ரெங்கநாதனாக, நடந்த நிலையில் - உலகளந்த திரிவிக்ரமனாக, அதாவது மேலே கண்ட அவதாரங்களின் முடிவில் எம்பெருமான் நேராக மீண்டும் வைகுண்டம் சென்று விடுகிறார். அவதார ரகஸ்யம் முடிந்துவிடுகிறது. இந்த ஸ்தலம் ஆயுள் விருத்தியைத் தரக்கூடியது. திருமணப் பிராப்தி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு செய்யக் கூடிய புண்ணியங்கட்கு (தர்மங்கட்கும் யாகங்கட்கும் 100 மடங்கு பலம் அதிகரிப்பதால்) பலமான பலன் கிடைக்கிறது.இங்கு செய்யப்படும். ஆயுள் விருத்தி ஹோமங்களும், திருமணத்தடை அல்லது திருமணம் நடைபெறாமல் இருத்தல் போன்றன நீங்கி திருமணம் விரைவில் நடக்க இப்பெருமானிடம் வேண்டும் வேண்டுதல்கள் விரைவில் கைகூடுகின்றன என்பது இங்கு காணப்படும் அதிசயிக்கத்தக்க உண்மையாகும். இங்கு இராமபிரான் கல்யாணராமனாக அதாவது வனம் ஏகும் முன் உள்ளசீத்தா ராமனாக திருமணக் கோலத்தில் காட்சி தருவதும் (திருமண வேண்டுதல்கள் நிறைவேறும்)நிகழ்ச்சிக்கு ஒரு காரணமாகும். 108 திவ்ய தேசங்களில் சோளிங்கபுரம் போல் இப்பகுதி வாழ் மக்களும் இதையொரு பிரார்த்தனை ஸ்தலமாகவே கொண்டுவழி பாடியாற்றுகின்றனர்.பூலோக வைகுண்டமென போற்றப்படும் திருவரங்கம், திருமலை, திருக்கோட்டியூர் ஆகிய ஸ்தலங்கட்கு உண்டான புகழோடு இத்தலத்தையும் இணைத்துப் பாசுரித்திருக்கிறார் பூதத்தாழ்வார். திருக்கோவிலூர் அஹோபிலம் (சிங்கவேள் குன்றம்) திருவரங்கம், அயோத்தி ஆகிய திவ்ய தேசங்களை ஒரு சேர சேவித்த உணர்வை இம்மலையில் உள்ள பெருமாள்களை தரிசித்து திரும்பும்போது உணர முடிகின்றது. திருமங்கையாழ்வாராலும், பூதத்தாழ்வாராலும் 20 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தபோது நீர்சூழ்ந்து கொண்டதால் 6 மாத காலம் அவர் தங்கியிருந்த மந்திரகிரி என்னும் ஊர் இங்கிருந்து சமீப தொலைவில் உள்ளது.
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், மங்களாசாசனம், திவ்யதேசம், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பல்லாவரம், திருநீர்மலை, நீர்வண்ணப் பெருமாள், மலைக்கோயில், மலையடிவாரக் கோயில், பூந்தமல்லி, காஞ்சிபுரம்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர-நாயக்கர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் பாடல் பெற்ற திருப்பதி.
914 : _ _ |a 12.96404941
915 : _ _ |a 80.11473281
916 : _ _ |a நீர் வண்ணன், நீலமுகில் வண்ணன்
918 : _ _ |a அணிமாமலர் மங்கை
923 : _ _ |a மணிகர்ணிகா தடாகம், ஷீர புஷ்கரணி காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி ஸவர்ண புஷ்கரணி
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
928 : _ _ |a இல்லை
930 : _ _ |a பிரம்மாண்ட புராணம் மற்றும் வடமொழி நூல்களில் இத்தலம் பற்றிப் பேசப்படுகிறது. இந்த தலம் அமைந்துள்ள பகுதியை காண்டவனம் என்றும், இத்தலம் அமைந்துள்ள மலையினை தோயத்தரி என்றும் புராணம் செப்புகிறது. இத்தலம் “ஸ்வயம் வ்யக்த ஸ்தலம்” அதாவது தானாகவே தோன்றிய தலமாகும். இராமாயணம் இயற்றிய வால்மீகி இந்த ஸ்தலத்திற்கு வந்ததாக ஒரு வரலாறு உண்டு. இங்கு வந்த வால்மீகி மலைமீதேறி சயனத் திருக்கோல அரங்கன் அமர்ந்த திருக்கோல நரசிம்மன், நடந்த திருக்கோல திருவிக்ரமன் ஆகிய மூவரையும் வழிபட்டு கீழே இறங்கலானார். ஏனோ தெரியவில்லை. இம்மூவரைச் சேவித்தும் வால்மீகிக்கு பூரண திருப்தியுண்டாகவில்லை. உள்மனதை ஏதோ வருடியது போல இருந்தது. கீழே இறங்கியதும் கீழ்த்திசை நோக்கி கரங்களை குவித்த வால்மீகி என் பிரிய ராமன் இங்கு இல்லை. ரமனியமான ராமபிரானே எங்கே உன் பேரழகுத் திருவுருவம் என்று ராமனைப் பிரிந்த நெஞ்சு வேகுவதுபோல நீர்மல்கப் பிரார்த்தித்து நின்றார். அந்தர்யாமியான பரஸ்வரூப நாராயணன் வால்மீகியின் பிரார்த்தனைக்கு இரங்கினார். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள்கள் மூலமாகவே வால்மீகிக்கு காட்சியளித்தார். அதாவது இங்குள்ள ரெங்கநாதனே ராமனாகவும், லட்சுமி தேவியே ஜானகியாகவும், ஆதிசேடன் இலக்குமணனாகவும் சங்குச்சக்கரங்கள் சத்ருக்கனர், பரதராகவும், விஸ்வக்சேனர் சுக்ரீவனாகவும் கருடன் ஆஞ்சநேயராகவும், ரம்மியமான நீர்வண்ண ரூபத்தில் காட்சி கொடுத்து வால்மீகியின் கண்ணீரைத் துடைத்ததாக ஐதீஹம். ராமனின் பேரழகில் அதாவது நீர்வண்ணனாக ராமன் காட்சி அளித்த தோற்றப் பொலிவை கண்டு மயங்கி நின்ற வால்மீகி இதே திருக்கோலத்தை எல்லோருக்கும் காட்ட வேண்டுமென்று வேண்டி நிற்க அவ்வண்ணமே ஆயிற்றென்பது வரலாறு. தாமரை மலர் பீடத்தில் அஸ்த முத்திரை பொருந்திய அபயமளிக்கும் அழகிய திருக்கரத்துடன், திருமார்பை சாளக்கிராம மாலை அலங்கரிக்க நீர்வண்ண ரூபத்தில் இங்குகாட்சி தருகிறார். இந்த மலைக்குத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய வந்தபோது தொடர்மழை பெய்து அடைமழையாக மாறி மலையைச் சுற்றிலும் அரண்போல் நீர் சூழ்ந்து கொண்டது. திருமங்கையால் பெருமாளைத் தரிசிக்க முடியவில்லை. ஒன்றிரண்டு நான்கைந்து ஆறேழுவென நாட்கள் கடந்து வாரங்களாகி மாதங்களுக்குள் ஐக்கியமாகிவிட்டது.என்ன நேர்ந்தாலும் சரி எத்தனை மாதங்களாயினும் சரி இப்பெருமானைச் சேவிக்காது செல்வதில்லையென முடிவு செய்துவிட்டார். “ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” அப்பேர்ப்பட்ட அர்ச்சாவதார மூர்த்தியை நீர் சூழ்ந்து விட்டால் மட்டும் சேவிக்காது சென்று விடலாமா என்று எண்ணி அங்கேயே தங்கி இருந்தார். தங்கியிருந்தார் 6 மாத காலம். பிறகு நீர்வற்றிப் போன பின்பு பெருமாளைக் கண்குளிரக் கண்டு பாக்களை மங்களாசாசனமாய் பொழிந்தார். திருமங்கையாழ்வார் வந்தபோது நீர் சூழ்ந்து நின்ற காரணத்தால் திருநீர்மலை என்றாயிற்று. அதற்கு முன்பு காண்டபவனப் பெருமாள் என்றும், காண்டபவன நாதன் என்னும் பெயர்களே வழக்கிலிருந்ததாக அறிய முடிகிறது. இந்த தலத்தில் ஒரு நாள் செய்யும் புண்ணியகாரியம் மற்ற ஸ்தலங்களில் 100 ஆண்டுகள் செய்வதற்கு சமம். வெகுதூரத்திலிருந்து இந்த தோயாத்ரி மலையைத் தரிசித்த மாத்திரத்திலேயே பாவங்கள் மறைகின்றன. சர்வேஸ்வரனின் மாயையே காண்டவ வனமாக ஏற்பட்டதால் உலகத்தில் மாயையில் சிக்கியிருக்கும் அனைத்து ஜீவராசிகளும் இத்தலத்தில் பெருமாளை சேவித்துக் கடைத்தேறுகின்றன. தோயம் என்ற சொல்லுக்கு பால் என்பது பொருள். ஒரு காலத்தில் இம்மலை நீர்மலையாக விளங்கப்போகிறது என்பதாலோ என்னவோ முதலிலேயே தோயாத்ரி என்றும் பெயர் ஏற்பட்டுவிட்டது. வாணாசுரன் என்னும் அரக்கனை கண்ணபிரான் கொன்றான் அவன் சிவபக்தன். அவனுக்கு ஆயிரம்கைகள். தன் மகள் பொருட்டு அநிருந்தனைச் சிறை வைத்தான் அவன்.அநிருந்தனை கண்ணன் மீட்டுப் போக வந்தான்.தன் உடல்வலியே பெரிதென்று எண்ணி கண்ணபிரானோடு பொருதான். கடும் யுத்தம் செய்தான். அவனுக்கு உதவவந்த அரக்கர்கள் அனைவரையும் கண்ணன் வீழ்த்தினான். வாணன் மட்டும் தவறாது கடும்போர் புரிந்தான். இறுதியில் கண்ணன் தன் சக்ராயுதத்தால் அவனது கரங்களை அறுத்து வீழ்த்தினான். இந்நிலையில்தன் பக்தனுக்கு இரங்கிய சிவன் அவனுக்கு உயிர் பிச்சை அளிக்க கண்ணனை வேண்டினான். அதனால் கண்ணன் அவனது 4 கரங்களை வெட்டாது விட்டான். மிகவும் வெட்கிப்போன வாணாசுரன் தனது நான்கு கரங்களால் கண்ணனைத் தொழுது அவனது நீர்மைத் தன்மையே பெரிது என்று கூறி, நீர்மலையெம் பெருமானைச் சுட்டிகாட்டி தொழுது நின்றான். நான்கு வேதங்களும் எம்பெருமானைத் தொழுவது போல நான்கு சுரங்களால் திருநீர்மலையினைத் தொழுது நின்றான். நீரினை அரணாகக் கொண்ட நீர்மலையானே தனக்கும் அரண் சர்வ உலகத்தையும் அவனே ரச்சிப்பவன் என்று தொழுதான். இதனைப் பிள்ளைப் பெருமாளையங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் கூறி இத்தலத்தின் மாண்பிற்கு மேலும் மெருகூட்டுகிறார்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
935 : _ _ |a சென்னைக்கு அருகாமையிலுள்ள பல்லாவரம் என்னும் ஊரிலிருந்து மேற்கில் சுமார் 5 கி.மீ. தொலவைில் இக்கோயில் அமைந்துள்ளது.. தற்போது சென்னையிலிருந்து பேருந்துகள் உள்ளன.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a பல்லாவரம்
938 : _ _ |a பல்லாவரம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a தாம்பரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000194
barcode : TVA_TEM_000194
book category : வைணவம்
cover images TVA_TEM_000194/TVA_TEM_000194_திருநீர்மலை_நீர்வண்ணப்பெருமாள்-கோயில்-0001.jpg :
Primary File :

cg103v092.mp4

TVA_TEM_000194/TVA_TEM_000194_திருநீர்மலை_நீர்வண்ணப்பெருமாள்-கோயில்-0001.jpg